Venn Nala Mayyam

தகவல்

ஓமியோபதி மருத்துவத்தில் ஒரு நோயாளிக்குத் தரப்படும் மருந்து அவரின் முழு உடல் நலனுக்கான மருந்து. வெளியில் பார்க்கும் நோய்க்குறிகளும் மனதில் தோன்றும் உபாதைகளும் மட்டுமே நோய்கள் அல்ல. நோயானது அதை தாண்டி உடல் அளவிலும் மன அளவிலும் உள்நோக்கி வேர் விட்டிருக்கும்.

அவ்வாறு உள்ள நோய்களுக்கும் மருந்து எடுத்துக் கொண்டால் தான் முழு குணம் கிடைக்கும். மரத்தின் வேர் எடுக்கப்பட்டால்தான் மரம் துளிர்க்காது என்பது போல.

நோயாளியின் உடல் மாற்றங்களையும் மன உணர்வுகளையும் அறிந்து அதனுடன் நோயின் அறிகுறிகளையும் ஆராய்ந்து மருந்து முடிவு செய்யப்படுகிறது.

இம்மருத்துவத்தில் நோயாளிகள் கூறும் நோயின் பெயர் நோயினால் ஏற்படும் அவதியைக் கொண்டு மட்டும் ஒருவரின் முழுவிவரத்தையும் அறிய முடியாது. ஒருவரின் முழு விவரங்களையும் அறிந்த பின்பே மருத்துவர் மருந்து தர முடியும். இதனால் முதல் முறையாக மருத்துவரை பார்க்கும் போது குறைந்தது கால் மணி முதல் ஒரு மணி வரை நேரம் செலவிட வேண்டி இருக்கும். அடுத்து வரும் நாட்களில் அதிக நேரம் தேவைப்படாது.

உடலில் உண்டாக்க கூடிய எல்லா நோய்களுக்கும் நோயானாலும் கட்டிகளாக இருந்தாலும் அவைகள் ஒவ்வொருவரின் உடல் அமைப்பை பொருத்து ஏற்படுபவை. இதனால் உள்ளுக்குள் கொடுக்கப்படும் மருந்துகள் நோய்களைக் குணமாக்கும்.

மருந்து உட்கொண்டதும் உடனே நோய் போய்விடும் என இம் மருத்துவ முறையில் எதிர்பார்க்க முடியாது. நாள்பட்ட நோய்களை பொறுத்து நோய் குறைய ஆரம்பிக்கவே சில நாட்கள் ஆகலாம். நோய் குணமாகவும் பல மாதங்கள் ஆகலாம்; பொறுமை தேவை. அதனால் மருத்துவரின் அறிவுரைப்படி மருந்தை எடுத்து கொள்வது நல்லது. நோய் குணமாகி விட்டால் மருந்து தேவைப்படாது.

    குணமாக்கப்படும் நோய்களில் சில:

  • தலைவலி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், மண்டை குடைச்சல், மன அழுத்தம், மன நோய்கள், மறதி, நரம்புக் கோளாறுகள், வலிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு.
  • காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், தொண்டை வலி , தைராய்டு, ஆஸ்துமா, சைனஸ். வயிற்றுப்புண் அல்சர், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, உணவு அலர்ஜி, ஒவ்வாமை, ஜீரண கோளாறு, மலச்சிக்கல், மூலம், பவுத்திரம்.

  • பித்தப்பை கற்கள் சிறுநீர்ப்பை கற்கள், சிறுநீர் கோளாறு.

  • தோல் வியாதிகள், தேமல், சொறி, அரிப்பு, சோரியாசிஸ், கால் வெடிப்புகள், மரு, கால் ஆணி . மூட்டுவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் (நீரழிவு, டயாபடீஸ்), காசநோய், புற்றுநோய்.

  • ஆண் பெண் சம்பந்தமான நோய்கள்

  • குழந்தைகள்: வயிற்றுப்போக்கு, சளி, இருமல், தும்மல், வயிற்றில் பூச்சிகள், தொண்டை சதை வளர்ச்சி, படுக்கையில் மூத்திரம்.